×

தாமிரபரணி மகாபுஷ்கர விழா நாளை துவக்கம் ஏரல் ஞான தீர்த்த கட்டத்தில் படித்துறை, சாலை சீரமைப்பு

ஏரல், அக்.10: தாமிரபரணி புஷ்கர விழா நாளை துவங்கும் நிலையில் ஏரல் ஞான தீர்த்த கட்டத்தில் பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக அங்குள்ள படித்துறை மற்றும் சாலையை சிறுத்தொண்டநல்லூர் கிராம மக்கள் சீரமைத்தனர். 144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை (11ம் தேதி) துவங்கி வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி நதிக்கரையின் தீர்த்தக் கட்டங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஏரல் தாமிபரணி ஆற்று கரையோரத்தில் உள்ள தீர்த்தக்கரை சுந்தரவிநாயகர் கோயில் அருகில் உள்ள ஞான தீர்த்த கட்டத்தில் மகாபுஷ்கர விழா நடத்துவதற்கு சிறுத்தொண்டநல்லூர் மக்கள் முடிவு செய்தனர்.  இதையடுத்து இவ்விடத்தில் தாமிரபரணி ஆற்றில் இறங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள படித்துறை கற்கல் பெயர்ந்து உடைந்த நிலையில் இருந்ததை அவர்கள் சீரமைத்தனர். மேலும் படித்துறையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராட செல்லும் வழித்தடம் மணல் திட்டுகள் மற்றும் அசுத்தமாக இருந்ததை ஜேசிபி மூலம் சீரமைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் செயலாளர் சிறுத்தொண்டநல்லூர் ரவிசங்கர், ஊர் பிரமுகர்கள் ராமகிருஷ்ணன், கிருபாகர ராஜா மற்றும் ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thamiraparani Mahabushkara Festival ,stage ,Arar Jnana Theertha ,
× RELATED வடசென்னை 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு